முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அதிபர் தேர்தலில் தீவிரவாதி போட்டி

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

காபூல்,அக்.5 - ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் முன்னாள் தீவிரவாதி ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுகிறான். அதற்கான அவன் தேர்தல் கமிஷனிடம் தனது பெயரை பதிவு செய்தான். அவனது பெயர் அப்துல் ரசூல் சய்யாப். 

இவன் கடந்த 1980 மற்றும் 1990_ம் ஆண்டுகளில் அஆப்கானிஸ்தான் ம்ற்றும் பாகிஸ்தானில் முகாம்களை தீவிரவாதிகளுக்கு  அமைத்து ராணுவ பயிற்சி அளித்து வந்தவன். இந்த நிலையில் கடந்த 1996_ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடனை சந்தித்தான். அப்போது சூடானில் தங்கியிருந்த அவரை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வந்தான். 

இவன் மூலமே அல்கொய்தா தீவிரவாத இயக்கம் ஆப்கானிஸ்தானில் வேரூன்றியது. அதை தொடர்ந்து 2001_ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11_ம் தேதி அமெரிக்கா மீது அல்கொய்தா இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு மூளையாக செயல்பட்டவன் இவன் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து இவன்  கூறியதாவது,

எனது நாட்டிற்கு சேவை செய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்