முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜியின் அதிர்ஷ்ட எண் 13 ?

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.14 - பொதுவாக 13 வது இலக்கம் என்றாலே பெரும்பாலும் பலருக்கு பிடிப்பதில்லை. அது அதிர்ஷ்டமில்லாத எண் என்று பலரும் நம்புகிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 13 என்பது ஒரு அதிர்ஷ்டமில்லாத இலக்கமாகும். அதனால்தான் அவர் பதவியிழந்தார் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் மம்தா பானர்ஜிக்கு 13 தான் ராசி போலும். வெள்ளிக் கிழமையும் அவருக்கு ராசி போலும். இதை நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை நிரூபித்திருக்கிறது. மேற்கு  வங்கத்தில் மம்தா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 

1998 ம் ஆண்டு ஜனவரி மாதம் திரிணாமுல் காங்கிரசை துவக்கினார் மம்தா. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2011 ல் அவரது கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இ. கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சிக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. நேற்று மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் வந்தது. அதில் வாக்கு எண்ணிக்கை தேதி 13. மம்தா பானர்ஜியின் எழுத்துக்கள்(ஆங்கிலத்தில்) 13. முதல்வர்(சி.எம்.) என்ற ஆங்கில வார்த்தைக்கும் எழுத்துக்கள் 13. என்று குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்