முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தீவில் 8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூன்.25 - அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அஙஅகு 8 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அலேசியன் தீவுகளில் உள்ள லிட்டின் சிட்கின் தீவின் தென் கிழக்கில் 23 கி.மீ. தொலைவில் 114 கி.மீ. ஆழத்தில் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. இதனால் வழக்கத்துக்கு மாறாக பசிபிக் கடலில் உயரமான அலைகள் எழும்பின. அதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்