முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளவக்கல் பெரியாறு - கோவிலாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

விருதுநகர் - தமிழக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன், தலைமையில் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது தெரிவித்ததாவது:
விருதுநகர் மாவட்ட விவசாய பெருமக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து பெரியாறு அணையின் முழு நீர் மட்டம் 204.50 மீ, முழு ஆழம் 14.50 மீ (47.57 அடி) அதன் முழு கொள்ளளவு 192 மில்லியன் கனஅடியாகும். கடல்மட்டத்தில் இருந்து கோவிலார் அணையின் முழு நீர் மட்டம் 212 மீ, முழு ஆழம் 13 மீ (42.65 அடி) அதன் முழு கொள்ளளவு 133 மில்லியன் கனஅடியாகும். பிளவக்கல் பெரியார் அணையில் இன்றைய ஆழம் 13.90மீ (45.61 அடி), இன்றைய கொள்ளவாக 174.15 மில்லியன் கன அடி நீரும், கோவிலாறு அணையில் இன்றைய ஆழம் 10 மீ (32.81 அடி), இன்றைய கொள்ளவாக 67.98 மில்லியன் கன அடிநீரும் உள்ளது. (பெரியாறு அணையில் 203.90 மீட்டரும், கோவிலாறு அணையில் 209 மீட்டர் நீரும் இருப்பில் உள்ளது) பெரியாறு அணைக்கு வினாடிக்கு 20.08 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து இரு அணைகள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ நீர் இருப்பைப் பொருத்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் கண்மாய் பாசனத்திற்கும், பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 3 கன அடி வீதம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் பயனாக வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள கான்சாபுரம், கொடிக்குளம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ப+ரிப்பாறைக்குளம், சீவனேரி கண்மாய், குணவந்தனேரி கண்மாய், கொடிக்குளம், பெத்தான்குளம், புங்கன்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் ஆகிய 8 கண்மாய்கள் மூலம் 1167.85 ஹெக்டேர் நிலங்களும், மற்றும் நேரடி கால்வாய் பாசனம் மூலம் 174.69 ஹெக்டேர் நிலங்களும் ஆகமொத்தம் 1342.54 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர் இருப்பை கருத்திற் கொண்டு விவசாய பெருமக்கள் அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பொன்னுப்பாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.முனுசாமி, சிவாகாசி சார் ஆட்சியர் திரு.அமர்குஷ்வாஹா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திருமதி.கனகுஅம்மாள் சுப்புராஜ், (வத்திராயிருப்பு), திரு.காளிமுத்து (திருவில்லிபுத்தூர்), திருமதி.பொன்னுத்தாய் (இராஜபாளையம்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.மயில்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.வி.ஆர்.கருப்பசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீ.ஆ.அ) திரு.பி.செல்வராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.அ.ராமசுப்பு, உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.ஜெயஅருள்பதி, உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து