முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் 11.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை  - டெல்டா மாவட்டங்களில் 1394 நெல்கொள்முதல் நிலையங்களில் 11. 75 லட்சம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்,.எல்.ஏ சந்திரசேகர் மணப்பாறை தொகுதியில் நேல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த நான்கு ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் 1394,மற்ற
மாவட்டங்களில் 297 என்று 1691நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன்மூலம் 11 லட்சத்து75 ஆயிரம் மெட்ரிக் டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு இதுவரை 75 லட்சத்து 89 ஆயிரம் ஊக்கத்தொகைதரப்பட்டுள்ளது.தேவைப்படும் இடங்களில் எல்லாம் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் திறக்க தேவையான உத்தரவுகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ 20 ரூபாய் அதிகமாக வாங்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் இதுபோன்ற நிலைமை எங்கும் இல்லை என்று இதுபோன்ற தவறுஇருந்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து