முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம்: நேபாளத்தில் சுவர் இடிந்து இந்திய தூதரக ஊழியர் மகள் பலி - சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் தூதரக ஊழியரின் மகள் பலியாகி உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.  நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவானது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

 

நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், கோவில்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்நிலையில் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூதரக ஊழியர் மதன் என்பவரது மகள் பலியாகி உள்ளார் என்று டுவிட்டரில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஊழியரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து