முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

ஆஸ்லோ: பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானா அலெக்ஸிவிச்சுக்கு 2015ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து இலக்கியப் பரிசுக் கமிட்டியின் தலைவரான சாரா டேணியஸ் கூறுகையில், துயரப்படுவோருக்காக தனது எழுத்துக்களைப் பயன்படுத்தியவர் ஸ்வெத்லானா என்று பாராட்டியுள்ளார். இலக்கிய நோபல் பரிசைப் பெறும் 14வது பெண் அலெக்ஸிவிச் ஆவார். கடைசியாக 2013ல் பெண் ஒருவருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிறுகதைகள், கட்டுரைகள், செய்தி ஆய்வுக் கட்டுரைகள் என பலதும் எழுதியுள்ளார். கடந்த 40 வருடங்களாக எழுதி வருகிறார் ஸ்வெத்லானா. சோவியத் காலத்திலும், அதன் பின்னரும் நடந்த நிகழ்வுகளை எழுத்து வடிவத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.தான் சந்தித்த மக்களின் துயரங்கள், சிரமங்கள், இயலாமைகள் என பலவித உணர்ச்சிகளை மையப்படுத்தி எழுதுபவர் ஸ்வெத்லானா. வலி மிகுந்த உலகை வெளியுலகுக்குக் காட்டிய பெருமைக்குரியவர்.

சிதறுண்டு போன மக்கள், குடும்பங்கள், சோவியத் நாடுகளை மையமாகக் கொண்டவை இவரது எழுத்துக்கள், படைப்புகள்.செர்னோபில் கொடூரம் குறித்து இவர் எழுதியவை மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா நடத்திய போர் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.ஒரு திறமையான பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளர் என்ற முகத்தையும் கொண்டிருப்பவர் ஸ்வெத்லானா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்