முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் வேட்பாளர் எஸ். ரத்னா: ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - கும்பகோணம் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர்  ராம. ராமநாதன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக கும்பகோணம் நகர மன்ற தலைவர் எஸ். ரத்னாவை அ  தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக  அ  தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக அ  தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ரத்னா (கும்பகோணம் நகர மன்றத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்