முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸா சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வரம்.ஆக.- 29 - கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஒரிஸ்ஸா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒரிஸ்ஸா மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இந்த கூட்டத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டி ( திருத்த ) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதா நிறைவேறியதின் மூலம் கூட்டுறவு சொசைட்டிகளின் பதவிக்காலம் தற்போதைய 4 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவின் மூலம் அனைத்து  சொசைட்டிகளிலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற்படுத்தபட்டோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். மேலும் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
 அது மட்டுமல்லாமல் பெண்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.
 ஒரிஸ்ஸா சிவில் கோர்ட்டு ( திருத்த ) மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேறியது.
இந்த கூட்டத்தொடரின் போது அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும்  பா.ஜ.க.  போன்ற எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பங்களும் ஏற்பட்டன. ஒரிஸ்ஸாவில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கவலைகளை தெரிவித்து கோஷமிட்டனர்.
சில மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் பிரதீப் குமார்  ஆமத் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்