முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை சோனியா காந்தி துவக்கினார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

வாரணாசி,  அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தரப்பிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை சோனியா காந்தி துவக்கினார். அவர் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்த தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நடக்க சில மாதங்கள் உள்ள போதும் காங்கிரஸ் கட்சி முன் கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் 2019ம் ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு உதவும் என்பதால் காங்கிரஸ் முன் கூட்டியே பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

வாரணாசியில் நேற்று நடந்த பேரணியில் சோனியா காந்தி பிரச்சாரத்தை துவக்கினார். அவர்  நடத்திய சாலையோர நிகழ்ச்சியில் பல ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.காங்கிரஸ் தொண்டர்கள் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நின்றார்கள்.

 சோனியா காந்தி சர்கியூட் ஹவுசில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் பேரணியை துவக்கினார்.

சோனியா காந்தி முதலில் காரில் வந்தார். பின்னர் அவர்  திறந்த வெளி வாகனத்தில் பயணம் செய்தார். அவர் கூட்டத்தினரை பார்த்து உற்சாகத்துடன் கையைசத்த படியே வந்தார். அவர் மீது தொண்டர்கள் ரோஜா இதழ்களை தூவி வரவேற்றார்கள்.

இந்த  பேரணியில் வந்த  பல மினி டிரக்குகளில்  உத்தரப்பிரதேசத்தின் 27ஆண்டு துயரம் என்ற தலைப்பிலான போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதேப்போன்று உத்தரப்பிரதேச மாநில ஆட்சி நிலைமையை விமர்சிக்கும் பதாகைகளைதொண்டர்கள்   எடுத்து வந்தார்கள். வாரணாசியில் ஒரு நாள் நிகழ்ச்சியாக சோனியா காந்தி நேற்று காலை  வாரணாசிக்கு வந்தார். மோடியின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் வாரணாசி எந்த வித முன்னேற்றமும் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.  கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி உள்ளது. வாரணாசியின் வலி என்கிற தலைப்பில் அந்த தொகுதியின் பிரச்சினை போஸ்டர்களை  காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் எடுத்து வந்தார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த கட்சி ரே பரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் ஆகிய கட்சிகள் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றி இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்