முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் அலுவலகங்களில் பருப்பு விற்க மத்திய அரசு திட்டம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - தபால் அலுவலகங்களில் பருப்பு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நுகர்பொருள் விவகார துறை செயலாளர் ஹேம் பாண்டே தலைமை வகித்தார். 

இதுகுறித்து நுகர்பொருள் விவகாரத் துறை அதிகாரி கூறியதாவது, “மாநில அரசுகளின் நியாய விலைக் கடைகள் போதுமானதாக இல்லை. எனவே வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அஞ்சலகங்கள் மூலம் மானிய விலையில் துவரை, உளுந்து, கடலை பருப்பை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார். நாட்டில் மொத்தம் 1.54 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. அவற்றில் 1.39 அஞ்சலகங்கள் கிராமங்களில் அமைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்