முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 6ம்தேதி முதல் 28ம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடக்கிறது கலெக்டர் நிர்மல் ராஜ் தகவல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்றுமுன்தினம் (3.2.2017) பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா ( ஆசு ) தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது மருத்துவம் மற்றம் சுகாதாரத்துறை மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

தட்டம்மை தடுப்பூசி

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது....

தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளது. இம்முகாம்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் 9 மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே தட்டம்மை , எம் எம் ஆர் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதன் மூலம் ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசி போடப் படுவதால் நோய் பாதிக்கா வண்ணம் குழந்தைகளை பாதுகாக்கலாம்.

இம்முகாம்கள் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் , மற்றும் தனியார் பள்ளிகளிலும், துணை சுகாதார நிலையங்களிலும் அங்கன்வாடி மையங்களிலும் நடத்தப் படுகிறது.1256 முகாம்கள் பள்ளிகளிலும் 867 முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் நடத்தப் படுகிறது. இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்து குழந்தைகள் பயன் பெறுவார்கள். இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தட்டம்மை ரூபெல்லா ஆகிய இரு நோய்களிலிருந்து வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை பாதுகாக்கலாம்.பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து சென்று தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.தியாகராஜன்,பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் மரு.அசோகன், துணை இயக்குநர் மரு.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்