முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்நாட்டில்தான் இருக்கிறது: வெளியிலிருந்து அல்ல பரூக் அப்துல்லா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்நாட்டில் இருந்துதான் என்றும் வெளியிலிருந்து அல்ல என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பலதரப்பட்ட கலாசாரத்தை காக்க வேண்டும் என்ற தலைப்பில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பாக சரத்யாதவ் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளை இந்தியா எதிர்கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் முயற்சியை உள்நாட்டில் உள்ள ஒரு சிலர் அதை கெடுத்துவிட உறுதியுடன் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியில் இருந்து அச்சுறுத்தல் இல்லை. உள்நாட்டில்தான் அச்சுறுத்தல் இருக்கிறது என்றார். தன்னுடைய சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் பரூக் அப்துல்லா பேசினார். காஷ்மீர் வாழும் மக்களில் சிலர் தேசியத்தையே கேள்விக்குறியாக்க முயற்சி செய்கின்றனர். நமது தேசியவாதம் குறித்து கேள்வி எழுப்ப அவர்கள் யார்? இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது காஷ்மீர் பகுதியானது இந்தியாவின் பக்கம் இருந்தது. சமத்துவம் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டததால்தான். இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து இருப்பதற்கும் நான் இந்திய முஸ்லீமாக இருப்பதற்கும் பெருமைப்படுகிறேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டை பற்றி பேசுபவர்கள்  அதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறார்களா? ஒருமைப்பாடு குறித்து அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் இது தொடர்பாக அவர்களின் செயல்பாடு குறைவாக இருக்கிறது என்றும் பரூக் அப்துல்லா கூறினார்.

சுதந்திர தின உரையில் காஷ்மீர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசினார். காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கும்படி உள்ளது. நாங்கள் விசுவாசமாகத்தான் இருக்கிறோம். ஆனால் ஒரு சிலருக்கு பரந்த மனப்பான்மை இல்லாதது வேதனையாக இருக்கிறது. காஷ்மீர் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து அறிய சர்வகட்சி குழு காஷ்மீருக்கு வந்தது. ஒரு விரிவான அறிக்கையும் அந்த குழு சமர்ப்பித்தது. ஆனால் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பரூக் அப்துல்லா மேலும் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து