முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகராட்சியில் ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் அலுவலர்கள் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு:

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.
டெங்கு பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஏடிஸ் கொசுக்களை உருவாக்கிடும் லார்வாக்களை அழித்திடும் பணிகளிலும் கொசுக்களை கட்டுப்படுத்திட மருந்து தெளித்தல்,கொசு மருந்து புகையடித்தல் மற்றும் தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் திருமங்கலம் பேருந்து நிலையம்,நகராட்சி சுகாதார மையம் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலவேம்பு கஷாயம் தினம் தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெங்கு விழிப்புணர்வு தினமான நேற்று திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கலந்து கொண்டு தலைமையேற்று உறுதிமொழியை வாசித்திட அதனை அலுவலர்களும்,பணியாளர்களும் திரும்பக்கூறி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சக்திவேல்,நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ்மோகன்,சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் அலுவலர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து