முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. அது போல கர்நாடகத்தின் உள்பகுதியில் இருந்து தமிழகத்தின் உள்பகுதி வரை தரைப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் மூடுபனி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழைப் பொழிவு இல்லை.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து