முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன்சிங் தமிழகம் வருகை

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

காரைக்குடி, டிச.- 10 - வரும் 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன்சிங் காரைக்குடியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கும், மானகிரியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் புதிய பிரிவை திறந்து வைக்கவும், பிரதமர் காரைக்குடி வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் கவனிக்க சிவகங்கை எஸ்.பிக்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை தமிழக காங்கிரசார் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்