முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் பயங்கர விபத்து 2 மாணவர்கள் பலி 7 பேர் படுகாயம்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ்ரோட்டில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டு இருந்த அருகம்புல் ஏற்றி சென்ற லாரி மீது தனியார் பொறியியல் கல்லூரி குவாலிஸ்கார் மோதியது இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பட்டிவீரன்பட்டியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு 12 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோமீது உரசியது. அப்போது எதிரில் தேனியில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பட்டிவீரன்பட்டி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் நெல்லூரை சேர்ந்த காளிதாஸ், மற்றும் மணியகாரன்பட்டியை சேர்ந்த சரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் சரவணன் மற்றம் மாணவர்கள் மதன், ராஜீ, சங்கிலி, நவீன்குமார், ஜவஹர், சபரிஸ்வரன், அஜய், மருதுபாண்டி, சீனிவாசன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பேருந்துவில் பயணம் செய்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றி செல்வதை தடுக்க வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை மாறக அனுமதி இன்றி சேர் ஆட்டோ இயக்க மாதம் தோறும் ஆட்டோகார்களிடம் மாமூல் வசூல் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனெடியாக நிலக்கோட்டை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வத்தலக்குண்டு காவல்துறையினர் மற்றும் பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து