முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாப்புவா நியுகினியாவில் நிலநடுக்கம்

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

பாப்புவா நியுகினியா, டிச. 17 - பாப்புவா நியுகினியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர்சேதமும் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பாப்புவா நியுகினியாவில் உள்ள லைய் நகரில் 115 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவாக இருந்ததாக அமெரிக்க புள்ளியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து ஓட்டல் வரவேற்பாளர் ஒருவர் கூறுகையில், 2, 3 நிமிடங்கள் தொடர்ந்து பெரியளவில் இருந்தது. ஓட்டலின் சில சுவர்கள் பாதிப்படைந்தன. இந்த நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றார். போர்ட் மோரிஸ்பியை சேர்ந்த மக்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்