முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

   உசிலம்பட்டி -     மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுர் ஜமீன் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
    தொட்டப்பநாயக்கனுர் ஜமீன்தார் கே.எஸ்.எஸ். பாண்டியர் விழாவிற்கு தலைமை தாங்கினார். பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஜல்லிக்கட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியாளர் சுகன்யா, வட்டாச்சியர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளும், மாடுபிடி வீரர்களும், கிராம கமிட்டியினரும் விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். திரைப்பட நடிகர் புரோட்டா சூரி வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக் காசுகளை பரிசாக வழங்கினார். மேலும் தங்ககாசு, பைக், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள்பேன், அண்டா, பிரிட்ஜ், எல்.இ.டி.டிவி, குத்துவிளக்குகள், உள்ளிட்ட பொருட்களும் வெற்றி பெற்ற காளை மாட்டின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசாக வழங்கப்பட்டன.
   வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் 9 மாடுகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ஆர்.ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
  ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கு “ஜல்லிக்கட்டு கலைஞன்”; விருது வழங்குவதாக உசிலை தாலுகா ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் சிவா ஸ்டில்ஸ் சிவப்பிரகாசம், சங்கர் ஸ்டுடியோ சங்கர், சன் டிஜிட்டல் கலைச்செல்வம் ஆகியோர் அறிவித்தனர்.
   ஜல்லிக்கட்டு விழாவினைக் காண உசிலம்பட்டியை சுற்றியுள்ள பொதுமக்கள் சுமார் இராண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். தொழிலதிபர் சோலை எம்.ரவிக்குமார், இளைய ஜமீன்தார் பி.பாலாபாண்டியர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராஜசேகரன் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து