முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வலுவானதாக இல்லை: டி. ராஜா

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.28 - பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய லோக்பால் மசோதாவும் வலுவானதாக இல்லை. இதனால் ஊழலை ஒழிக்க முடியாது. அதனால் இந்த லோக்பால் மசோதாவிலும் திருத்தம் கொண்டுவருவோம் என்று வலது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான டி.ராஜா தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு லோக்சபையில் அதன் மீது நேற்று உறுப்பினர்களின் விவாதம் தொடங்கிவிட்டது. இந்தநிலையில் டி.ராஜா நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா வேண்டும். லோக்சபையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய லோக்பால் மசோதாவும் ஊழலை ஒழிக்கும் அளவுக்கு வலுவானதாக இல்லை. அதனால் ஊழலை ஒழிக்கும் வகையில் இந்த லோக்பால் மசோதாவை பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வர எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள லோக்பால் மசோதா எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. அதனால் மசோதாவில் திருத்தம் கொண்டுவர இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. லோக்பால் மசோதாவில் சி.பி.ஐ. சேர்ப்பது தொடர்பாகவும் லோக்ஆயுக்தா மசோதாவில் ஒரு திருத்தமும் கொண்டு வர இருக்கிறோம். அதேசமயத்தில் மத்திய அரசின் பெடரல் அமைப்பு எந்தவிதத்திலும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுவோம். மாநிலத்தின் அதிகாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது. அரசியல் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நாங்கள் விரும்புகிறோம். அதேசமயத்தில் சி.பி.ஐ. ஒரு விசாரணை அமைப்பாக இருப்பதால் அதன் செயல்பாடும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் ராஜா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்