முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகும் - அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் 16-ம் தேதி காலை 9.30 மணியளவில் அரசு இணையதளங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ள அரசுத் தேர்வு இயக்ககம், இணையதள முகவரிகளையும் வெளியிட்டுள்ளது. அதில், www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளலாம் என்றும், தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வகையில் புதிய முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து