முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

நுங்கின் பயன்

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

பணமே இல்லையாம்

சிங்கப்பூரில் 61 சதவீதத்தினரும், நெதர்லாந்தில் 60 சதவீதத்தினரும், பிரான்ஸில் 59 சதவீத மக்களும்,  ஜெர்மனியில் 33 சதவீதத்தினரும், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து கின்றனர். எனவே மேலே கூறியுள்ள நாட்டிற்குச் செல்லும் போது ரூபாய் நோட்டுகள் பற்றி கவலைப்படாமல் சென்று வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago