முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அறிகுறிகள்

ஒருவருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், அசிடிட்டி, வயிற்று அல்சர், மலச்சிக்கல், குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை காரணங்களாக அமைகின்றன. இவை தீவிரமாக இருந்தால், அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.

சசாங்காசனம்

சசாங்காசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இதனால், இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுவதால் முதுகு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவு உயரம்!

சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago