முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

32 மொழிகளை சரளமாக பேசுபவர்

நமக்கெல்லாம் ஒன்று இரண்டு மொழிகளையே ஒழுங்காக பேசுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒருவர் 32 மொழிகளில் சரளமாக பேசி தள்ளுகிறார். அவர் யார் தெரியுமா.. ஐரோப்பா பாராளுமன்றத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளரான கிரேக்கத்தைச் சேர்ந்த Ioannis Ikonomou ஆவார். தொடக்கத்தில் புரூசெல்ஸ் நகரில் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெங்காளி, ஸ்வாஹிலி, துருக்கி என 32 மொழிகளில் வெளுத்து கட்டுகிறார்.

மிகவும் பெரியது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.

ரகசியமாக சமூக சேவை ஆற்றி வந்த 9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. இவர்கள் 30 ஆண்டுகளாக ரகசியமாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விஷயம் அவர்களது கணவன்மார்களுக்கு கூட தெரியாது. அவர்கள் அனைவரும் அதிகாலை 4 மணிக்கு ரகசியமாக சந்தித்து கொள்வர். தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை போன்ற தங்களால் ஆன சேவைகளை செய்து வந்தனர். இவை அனைத்தையும் தங்களது வீடுகளிலேயே தயாரித்து கொண்டு வந்தும் கொடுத்தனர். அவர்கள் அளிக்கும் அந்த பைகளில் உங்களை சிலர் நேசிக்கின்றனர் என எழுதப்பட்டிருக்கும் என்றால் ஆச்சரியம் தானே..

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

வயலின் இசைக் கருவி எத்தனை மரங்களால் செய்யப்படுகிறது தெரியுமா?

இசைக்கருவிகளில் மிகவும் பிரபலமானது வயலின் இசைக் கருவி. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த இசைக் கருவி எத்தனை மரங்களால் செய்யப்படுகிறது என்று தெரியுமா... ஒரு வயலின் 70க்கும் மேற்பட்ட தனித்தனி மரத் துண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் பிடில். வயலின் உள்புறம் காலியாகவே இருக்கும். மேல்கூடு பல்வேறு மரச்சட்டகங்களால் இணைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago