முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பழமையான தொழில் பல் மருத்துவம்

உலகின் பழமையான தொழில்களில் பல் மருத்துவமும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வின் போது கிடைத்த மண்டையோட்டில் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லில் துளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலை கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது வரலாற்று காலத்துக்கு முன்பே ஒரு சொத்தை பல்லை கருவிகளால் அகற்றிய தடயம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம்

நமது வரலாற்று புத்தகங்களில் சிரபுஞ்சி அதிக மழை பெய்யும் இடம் என படித்திருப்போம். ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் என்ற கிராமம் தான். இங்கு ஆண்டுக்கு 470 அங்குலம் அதாவது 12 ஆயிரம் மிமீ  அளவுக்கு மழை பதிவாகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 மிமீ மழை பெய்கிறது. எனவே இந்த பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுக்க மழையை மறைத்தபடி ஆடை அணிந்து கொண்டே வெளியிடங்களில் வேலை பார்ப்பர். தங்களுக்கு குடையாக வாழை இலை அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட குடைகளை பயன்படுத்துகின்றனர்.

பேசும் ரோபோக்கள்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் 2 செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே இருந்ததாம். இந்த மொழி செயற்கை நுண்ணறிவு ரோபோக்களுக்கு மட்டுமே புரியுமாம்.

மேகங்களின் எடை எவ்வளவு - கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும்.  சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

புதிய கிரகம்

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. கெல்ட் 9 பி என்று கிரகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இது வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.

தேவை முன்னெச்சரிக்கை

இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago