முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம்

நமது வரலாற்று புத்தகங்களில் சிரபுஞ்சி அதிக மழை பெய்யும் இடம் என படித்திருப்போம். ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் என்ற கிராமம் தான். இங்கு ஆண்டுக்கு 470 அங்குலம் அதாவது 12 ஆயிரம் மிமீ  அளவுக்கு மழை பதிவாகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 மிமீ மழை பெய்கிறது. எனவே இந்த பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுக்க மழையை மறைத்தபடி ஆடை அணிந்து கொண்டே வெளியிடங்களில் வேலை பார்ப்பர். தங்களுக்கு குடையாக வாழை இலை அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட குடைகளை பயன்படுத்துகின்றனர்.

கையில் ஆபத்து

அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைப்பது நல்லது.

நெட்வொர்க் இல்லையா ?

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago