முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சூப்பர் ஃபாஸ்ட்

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகமான கேமராவான 15 ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும். ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும். அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டார் ஹோட்டல்களில் விளையாடப்படும் பவுலிங்

சில பொம்மை போன்ற பின் என்ற ஏழெட்டு வடிவங்களை சற்று தொலைவிலிருந்து ஒரு பந்து மூலம் வீசி பள்ளத்துக்குள் தள்ளச் செய்யும் விளையாட்டை பவுலிங் என்கின்றனர். பெரும்பாலும் திரைப்படங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் நாயகிகள் விளையாடுவது போன்ற காட்சிகளை நாம் பார்த்து ரசித்திருப்போம். இந்த பவுலிங் விளையாட்டு எங்கு தோன்றியது தெரியுமா.. கிமுவிலேயே எகிப்தில் இந்த விளையாட்டு விளையாடியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆசியா மைனரில் லிடியா மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஹெரோடோட்டஸ் குறிப்பிடுகிறார். கிபி 300 இல் ஜெர்மனியில் விளையாடியிருக்கிறார்கள். தனது படைவீரர்கள் இதை விளையாட கூடாது என இங்கிலாந்து மன்னர் 3 ஆம் எட்வர்டு தடை விதித்துள்ளான். அதன் பின்னர் உலகம் முழுவதும் இது பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

அமெரிக்காவில் எப்போது முதன்முதலாக இந்திய உணவகம் தொடங்கப்பட்டது

உலக அளவில் இந்திய உணவு வகைகள் மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளின் டாப் 10 பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. தோராயமாக 24 நாடுகளில் உள்ள மக்களில் 62 சதவீதம் பேர் இந்திய உணவை விரும்புகின்றனர். அதற்கு காரணம் இந்திய உணவு வகைகளில் காணப்படும் பல்வேறு வகையான ரகங்களும், அவற்றில் சேர்க்கப்படும் அரிதான மசாலா மற்றும் மூலிகை பொருள்களும் உலக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய உணவகம் 1960களின் மத்தியில் தொடங்கப்பட்டது. பாம்பே மசாலா என்ற உணவகம் தான் பரவலாக கவனம் பெற்றது. தற்போது அமெரிக்காவில் சுமார் 80 ஆயிரம் இந்திய உணவகங்கள் உள்ளன. நியூயார்க் நகரில் தான் அதிக இந்திய உணவகங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக   சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ளன.

அமேசான் காட்டில் 12, 500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

அமேசான் காடுகள் அதிசயங்களுக்கும், மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். உலகின் மிகப் பெரிய வனப்பகுதியுமாகும். இந்த வனத்தின் அனைத்து ஆச்சரியங்களும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இதன் பிரம்மாண்டத்துக்கு ஓர் சாட்சி. இந்நிலையில் தெற்கு கொலம்பியாவில்  Chiribiquete National Park என்ற இடத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சுமார் 8 மைல் நீளமுள்ள பாறைத் தொடரில்தான் பழங்கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டு முதன் முதலில் உலகுக்கு தெரிய வந்த போதிலும் அந்த இடத்துக்கு செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. அண்மையில் அங்கு சென்ற கொலம்பிய- பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு தொல்லியல் ஆய்வு குழுவினர் மிகக் கடினமான மலையேற்றத்துக்கு பின்னர்தான் அப்பகுதியை அடைந்தனர். அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சுமார் 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருக்கலாம் என்கின்றனர். அவற்றில் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன என பல்வேறு பட்ட உருவங்கள் வரையப்பட்டுள்ளன.  இது வரை இப்படி ஒரு பாறை ஓவியம் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது இதன் கூடுதல் ஆச்சரியமாகும்.

13 ஆயிரம் கிமீ நிற்காமல் பறக்கும் பறவை

மனிதர்களுக்கு அதிலும் பயிற்சி பெற்றவர்களுக்கே சும்மா ஒரு 2 கிமீ ஓடினாலே நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். 13 ஆயிரம் கிமீ அதிலும் 10 நாட்கள் நிற்காமல் அன்னம் தண்ணி புழங்காமல் ஒரு சிறிய பறவை பறக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. Bar-tailed Godwit என்ற நாரை வகையைச் சேர்ந்த பறவைதான் இந்த சாகசக்காரி. அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் இது இனப்பெருக்கத்துக்காக பசிபிக் பெருங்கடலை கடக்கிறது. 13 ஆயிரம் கிமீ கடந்து நியூஸிலாந்து செல்கிறது. இடையில் எங்கும் நிற்காமல்.. எங்கு நிற்க.. அதுதான் கடலாச்சே.. இரை தண்ணீர் கூட எடுக்காமல் 10 நாள் பயணம்.  இதை நம்பாத விஞ்ஞானிகள் இருக்கிறார்களே... அதற்காகவே இதன் காலில் ஜிபிஎஸ், சென்சர் என்ற கண்ட கருமாந்திரங்களையும் வைத்து ஆராய்ந்ததில் அது உண்மை தான் என்பது உறுதியானது. ஆனால் எப்படி? 10 நாள் எதுவும் சாப்பிடாமல்... விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் Bar-tailed Godwit அது தன்பாட்டுக்கு கடல் மீது பறந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago