முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதுமையை தவிர்க்க ...

நம் என்றும் இளமையாய் இருக்க பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு குறைந்த சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை எடுத்துக்கொண்டால் நல்லது.

வேப்பிலையின் நன்மை

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் வேப்ப மரம். வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

மின்சக்தியால் தாக்கும் மீன்

'போராக்' என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன. 'போராக்' வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்ளவும் இவை பயன்படுத்தி கொள்கின்றன. இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் 'நேச்சர் கம்யூனிகேஷன்' என்ற அறிவியல் இதழில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடம் இருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் ஆற்றலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு முதலையை கொல்ல முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

ராட்சத பென்குயின்கள்

பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago