முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

மீனின் உயிரணுவிலிருந்து சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்

இன்றைக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொடிய அரக்கனாக நாம் பிளாஸ்டிக்கையே சொல்ல முடியும். நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதன் தீமைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு பெருகிக் கொண்டே போகின்றன. மாற்று பிளாஸ்டிக்கை தேடி விஞ்ஞானிகளும், சூழலியல் ஆர்வலர்களும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஆறுதல் படுத்தும் செய்தியை சீனாவில் உள்ள தியான்ஜின் பல்கலை கழகம் கொண்டு வந்துள்ளது. அங்குள்ள அறிவியலாளர்கள் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக்கை சால்மோன் மீனின் உயிரணு மற்றும் தாவர எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி கண்டு பிடித்துள்ளனர். இதை ஹைட்ரோஜெல் என்று அழைக்கின்றனர். இனியாவது அது வர்த்தக பயன்பாட்டுக்கு வந்து உலகில் புதிய மாற்றத்தை உருவாக்குமா.. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கால்சியத்தின் பங்கு

வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட 4 மடங்கு வலிமையானது மனித எலும்பு. பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகளும், அதுவே வளர்ந்த ஒருவருக்கு சுமார் 206-ஆக இருக்கும். இந்த எலும்புகளின் உறுதிக்கு கால்சியமே முக்கிய காரணம்.  நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது.

புதிய முயற்சி

டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) ஆகும்.

செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

டப்பிங் படங்கள் என நமது மக்கள் சிறிது கிண்டலும் கேலியுமாக பேசப்பட்ட காலம் வெகு விரைவில் மலையேறப் போகிறது. மொழி மாற்ற படங்களின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதுமைகள் உருவாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் அது இன்னும் ஒரு படி மேலே சென்று TrueSync என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் இயக்குநரான ஸ்காட் மன் என்பவருக்கு சொந்தமான  ’பிளாலஸ் ஏஐ’ (Flawless AI) என்ற நிறுவனம் தான் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், ஒரு நடிகரின் மொத்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப முகம் மற்றும் வாயசைவில் மூலத்தில் நுணுக்கமான மாற்றங்களை செய்து, வசனங்களை பொருந்த வைக்கிறது.  இனி எந்த மொழியையும் நடிகர்கள் தெளிவாக பேசுவது போல காட்சியை உருவாக்கி விட முடியும் என்பதுதான் அது, இது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago