முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஃப்ளப்பி பான்கேக்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ஃப்ளப்பி பான்கேக் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. முட்டை –  3.
  2. மைதாமாவு - 2 ஸ்பூன்.
  3. பால் – 4 ஸ்பூன்.
  4. வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.
  5. பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
  6. சர்க்கரை - 2 ஸ்பூன்.
  7. எண்ணெய் - சிறிதளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. இரண்டு பாத்திரங்களை எடுத்துக்கொள்ளவும்,3 முட்டையை உடைத்து வெள்ளை கரு ஒரு பாத்திரத்திலும்,மஞ்சள் கரு ஒரு பாத்திரத்திலும் எடுத்துக்கொள்ளவும். 
  2. முட்டையின் மஞ்சள் கரு உள்ள பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதாமாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்,4 ஸ்பூன் பால் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்தில் எக் பீட்டரை (முட்டையை கலக்கும் எந்திரம்) வைத்து சிறிது நேரம் நன்கு நுரை வரும் வரை நன்றாக அடித்து கலந்து விடவும்.
  5. ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு எக் பீட்டரை வைத்து முட்டையை நுரை வரும் வரைஅடித்து கலந்து விடவும்.
  6. மேலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு மீண்டும் எக் பீட்டரை வைத்து  முட்டையை சிறிது நேரம் கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. தயார் செய்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு கலவையை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  8. ஒரு பாலீத்தின் கவரில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி
  9. வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் தவா வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி தவா முழுவதும் எண்ணெய் படும் படி தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
  11. தவா சூடானவுடன்,தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவை உள்ள பாலீத்தின் கவரின் ஓரத்தில் சிறிதளவு வெட்டி முட்டை கலவையை இரண்டு வட்டமாக தவாவில் ஊற்றி வேக வைக்கவும்.
  12. 2 ஸ்பூன் தண்ணீரை தவாவில் ஊற்றி தவாவை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் பான்கேக்கை நன்றாக வேக வைக்கவும்.
  13. 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பான்கேக்கை திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. சுவையான ஃப்ளப்பி பான்கேக் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago