முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். புள்ளி பட்டியல்: ஆர்.சி.பி. அணி முதலிடம் : புளூ மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி யாரிடம்?

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 

ஐ.பி.எல். தொடர்...

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலையை இங்கு காணலாம்.

முதலிடத்தில் பெங்களூரு...

2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும் உள்ளது. அடுத்த இடங்களில் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3-வது இடத்திலும், குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது. ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் பஞ்சாப் 5-வது இடத்தில் உள்ளது.

7-வது இடத்தில் சென்னை...

6-வது இடத்தில் இருந்த கொல்கத்தா, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கடைசி இடத்தையும், 10-வது இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சென்னை 7-வது இடத்திலும், ஐதராபாத் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் 9-வது இடத்திலும் உள்ளன.

புளு நிற தொப்பி... 

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கான புளு நிற தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நூர் அகமதுவிடம் உள்ளது. அவர் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்டார்க் (2 போட்டி 8 விக்கெட்), கலீல் அகமது (3 போட்டி 6 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

நிக்கோலஸ் பூரனிடம்... 

அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரனிடம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சாய் சுதர்சன் 137, டிராவிஸ் ஹெட் 136 ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து