எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், விராட் கோலி அனைத்துப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இங்கிலாந்து சென்று குடிபெயர விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விராட் கோலி ஐ.பி.எல்.லில் இதுவரை 8 சதம், 56 அரைசதம் உள்பட 8094 ரன்கள் விளாசியுள்ளார். இந்தத் தொடரிலும் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வேளையில் வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ. தடைவிதித்திருக்கிறது. இந்த நிலையில், சிட்னி அணியில் விராட் கோலி விளையாட விருப்பதாகவும் அதற்கான 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சிட்னி அணி தெரிவித்திருக்கிறது.
__________________________________________________________________________________________
தரவரிசையில் மெத்வதேவ் சறுக்கல்
சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார். இந்நிலையில், ஏ.டி.பி. தரவரிசைப் பட்டியலில் கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு டாப் 10 இடத்தை முதன்முறையாக இழந்துள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்.
தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார். இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
36 செல்போன்கள் திருட்டு: 7 பேர் கைது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
__________________________________________________________________________________________
முக்கிய பட்டியலில் மனிஷ் பாண்டே
ஐ.பி.எல். தொடரின் மும்பை - கொல்கத்தா ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் இடம் பிடித்து 19 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே ஐ.பி.எல். வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி 2008-ம் ஆண்டில் உதயமான ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள அனைத்து தொடர்களிலும் ஆடிய டோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் மனிஷ் பாண்டேவும் இணைந்துள்ளார். அவர் 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
சென்னையில் கிளப் கூடைப்பந்து
சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முதலாவது சபா கிளப் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது, வரும் மே மாதம் நடைபெறவுள்ள எப்ஜபிஏ டபிள்யூஏஎஸ்எல் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
__________________________________________________________________________________________
மும்பை அணிக்கு நியூசி. வீரர் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் கேன் வில்லியம்சன் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் வென்றது, பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை அணிக்குள் கொண்டு வந்தது என அவர்களது திட்டங்கள் அனைத்தையும் அழகாக செயல்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க அவர்கள் விடவில்லை. ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றார்.
__________________________________________________________________________________________
பட்டோடி கோப்பைக்கு ஓய்வு
2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.
__________________________________________________________________________________________
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் சாதனை
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 5வது வீரராக சூர்யகுமார் (8,007 ரன்) இணைந்துள்ளார். இந்தப்பட்டியலில் விராட் கோலி (12,976 ரன்), ரோகித் சர்மா (11,851 ரன்), ஷிகர் தவான் (9,797 ரன்), சுரேஷ் ரெய்னா (8,654 ரன்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை
02 Apr 2025ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
-
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.
-
திருப்பூர் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது
02 Apr 2025திருப்பூர், பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசா
-
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: மாடி முட்டியதில் காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு விஜயபாஸ்கர் முதலுதவி
02 Apr 2025விராலிமலை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்தார்.
-
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்கப்படுமா ? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
02 Apr 2025சென்னை : புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
-
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர் தற்கொலை
02 Apr 2025திருச்சி, ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது : பார்லி.யில் ஆ.ராசா பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்பு மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்று பாராளுமன்றத்தில் வக்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விவாதத்தில் தி.மு.க.
-
ரூ. 896 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
02 Apr 2025சென்னை, தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு
02 Apr 2025புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
02 Apr 2025சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
02 Apr 2025கேரளா, எம்புரான் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்ககோரி மனு.
-
வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் எதிர்ப்பு
02 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
-
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: அமைச்சர் தகவல்
02 Apr 2025ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்து இஸ்ரேல் புதிய உத்தரவு
02 Apr 2025டெல் அவிவ், அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.
-
மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643 ஆக உயர்வு
02 Apr 2025மியான்மரில் : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவ
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
-
காசா முனையில் மேலும் ராணுவ தாக்குதல் தீவிரம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தகவல்
02 Apr 2025இஸ்ரேல் : காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளர்.