முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவானைக்காவல் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      ஆன்மிகம்
thiruchendur-festivel

Source: provided

திருச்சி : திருவானைக்காவில் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் நேற்று (மார்ச் 30-ஆம் தேதி) நடந்தது.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்தநிலையில், முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 7.10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய பகுதிகளில் தேர் சுற்றி வந்து காலை 10.30 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பித்தனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து