முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      சினிமா
RPM-Trailer 2025-04-01

Source: provided

நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் பி எம்  ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கல்பனா ராகவேந்தர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில், டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில், இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், டேனியல் பாலாஜி ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பனியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து