முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      உலகம்
ChatGPT

புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி அரசியல் பிரபலங்கள் படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். உலகம் முழுவதும் கிப்லியை பயன்படுத்தத் தொடங்கியதால் பயனர் செயல்பாடு அதிகரித்துள்ளது. இந்த மோகம் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த அம்சம், இலவசமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். ஸ்டுடியோ கிப்லி மார்ச் 26 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து, பிரபலங்கள், அரசியல்வாதிகள் கூட தங்கள் ஸ்டுடியோ கிப்லி பாணி படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேலும் ஐந்து நாட்களில் ஒரு மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்தியதாகவும், கடைசி ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்த நிலையில், இது போன்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜி.பி.டி. வழங்கும். இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து