முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி டோர் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      சினிமா
The-Door-Review 2025-04-01

Source: provided

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நாயகி பாவனாவின் தந்தை விபத்தில் மரணிக்கிறார். இதனால் மனம் உடைந்து போகும் பாவானா, சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை மெல்ல தொடங்குகிறார். அப்போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கு என்ன சம்மந்தம்?, அவரை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதை சொல்லும் படமே தி டோர். தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராமனுக்கு வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம் என்றாலும் அதில் குறைவின்றி செய்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி உள்ளிட்ட பலரும் கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.  ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவையும் கொடைக்கானலையும் அழகாக காட்டியிருக்கிறார். வருண் உன்னியின் பின்னணி இசை அருமை. எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை சற்று கூட்டி காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் வெற்றியின் கதவு திறந்திருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து