முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்கக் கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இதற்கு டெல்லி மதுபான கொள்கை ஊழலுக்குத் தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்துள்ளார். இந்த ஊழவில் அதிகம் பயனடைந்தது ஆம் ஆத்மி கட்சி. எனவே, ஒரு குற்றத்திற்காகக் காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் அளித்தது.

அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்கவும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கெஜ்ரிவால் சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து