முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குழுமத்திடம் உண்மையில் பலனடைந்தது யார்?

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குழுமத்திடம் 2009ம் ஆண்டு கொடுக்கப்பட்ட ரூ. 425 கோடி மூலம் உண்மையில் பலனடைந்தது யார்? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது குறித்து நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஊடக உரிமைகளை மொரீஷியஸை சேர்ந்த வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குழுமத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியது. இதையடுத்து ஒளிபரப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குழுமத்துக்கு ரூ. 425 கோடியை மல்டி ஸ்கிரீன் மீ டியா சிங்கப்பூர் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பரிமாற்றத்தில் உண்மையில் பலனடைந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போன்று வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுத்த போது உத்தரவாத தொகையாக 18.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிசிசிஐ அமைப்பு கொடுத்ததில் அன்னிய செலாவணி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதே போல் 2009ம் ஆண்டு ஐ.பி.எல். 2வது கிரிக்கெட் தொடரின் போது ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி தென் ஆப்பிரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கிய பிசிசிஐ 49.86 மில்லியன் அமெரிக்க டாலர்களை டெபாசிட் செய்தது. இது தவிர அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக 19 காரண விளக்கம் கோரும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து