முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிப். 26ல் லல்லு மகள் - முலாயம் பேரன் திருமணம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - லல்லு பிரசாத் யாதவின் மகளுக்கும், முலாயம்சிங் யாதவின் பேரனுக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண வைபோகம் பிப்ரவரி மாதம் 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் என தெரிகிறது.
பீ கார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜலட்சுமிக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங்கின் பேரன் தேஜ் பிரசாபுக்கும் நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தெற்கு டெல்லி, சத்தார்பூ ரில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இரு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிறுவனர் நிதீஷ்குமார், கட்சி தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் ஜிதன்ராம் மன்ஜி, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா பரிவார் என்ற பெயரில் செயல்பட முடிவு செய்துள்ளது. பாஜ அரசுக்கு எதிராக இந்த கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் இல்ல திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து