முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஒதுக்கீடு: நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுப்போர் பின்பற்ற வேண்டிய ஊழல் தடுப்பு, தொழிலாளர் நலன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுரைகளை மத்திய அரசு அறிவித்தது.
 
46 நிலக்கரிச் சுரங்கங்களை பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் எடுப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அடங்கிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, நிலக்கரிச் சுரங்க மேம்பாட்டுத் துறை இணை செயலர் விவேக் பரத்வாஜ் கூறியதாவது:

நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு அடிப்படை ஊதியம் ஆகியவை குறித்து இந்த ஒப்பந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட நிலக்கரி நிறுவனம் பின்பற்ற வேண்டும். மேலும் நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் எடுக்கும் நிறுவனம் அரசால் வரையறுக்கப்பட்டுள்ள திறனறி அளவுகோலின்படி செயலாற்ற வேண்டும்.

இது தவிர, ஏலத் தொகைக்கான முன் பணத்தை மூன்று தவணைகளுக்குள் செலுத்த வேண்டும். ஊழல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஷரத்துகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏல ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் அல்லது ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து