முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மன் விமான கருப்புப் பெட்டியில் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

பாரீஸ் - ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மன் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து விசாரணைக்கு உகந்த பல தகவல்கள் கிடைத்ததாக பிரான்ஸ் விமான போக்குவரத்து புலனாய்வு கழகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விமானத்தின் சிதறல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. விமானத்திலிருந்த 144 பயணிகளும் 6 பேர் கொண்ட விமான குழுவினரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உடல்களை மீட்பதில் சிரமமான நிலையே நீடிக்கிறது.

இந்த தேடலில், விமானி அறையில் பதிவான குரல் பதிவு கொண்ட ஆடியோ ரெக்கார்டர் மற்றும் கருப்பு பெட்டி கிடைத்தது தேடலில் நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் விமான போக்குவரத்து புலனாய்வு கழக தலைவர் ரெமி ஜவுதி கூறும்போது,

விமானி அறையில் பதிவான குரல் பதிவுகள் நம்பகமான தகவல்களை நமக்கு அளிக்கும். ஆனால் உடனடியாக இதிலிருந்து எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது. முழுமையான விவரங்கள் கிடைக்க சில வாரங்கள் அல்லது மாதங்களும் ஆகலாம். விமான போக்குவரத்து அதிகாரியிடம் பைலட் இறுதியாக தொடர்புகொண்டு பேசியது மட்டும் உறுதியாக உள்ளது என்றார். விமானத்தில் சென்றவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த மோசமான விபத்து ஜெர்மன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து