முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக்கப்மேனுக்கு அஜீத் உதவி: பைக் வாங்கி கொடுத்தார்

திங்கட்கிழமை, 18 மே 2015      சினிமா
Image Unavailable

அஜீத் ஓசையில்லாமல் பலருக்கு உதவி வருகிறார். ஏழை மாணவ–மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் கொடுக்கிறார். மருத்துவ சிசிக்சைகளுக்கும் நிதி வழங்குகிறார். சமீபத்தில் தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களுக்கு சென்னை அருகே நிலம் வாங்கி வீடுகள் கட்டி கொடுத்தார்.

தோட்டக்காரர், சமையல்காரர், டிரைவர் உள்ளிட்டோருக்கு இந்த வீடுகளை கட்டி கொடுத்தார். கிரகப்பிரவேசம் செய்து அந்த வீடுகளில் அவர்கள் குடியேறி இருக்கிறார்கள். தற்போது தனது மேக்கப் கலைஞர்களுக்கு புதிதாக பல்சர் பைக் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி உள்ளார். அந்த பைக்கை மேக்கப்மேன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து