முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் 5 தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 4 நிறுவனங்கள் ஆந்திராவை சேர்ந்தவை. ஆரோக்கியா பால் மட்டும் தமிழகத்தில் இருந்து வினியோகிக்கப்படுகிறது. தனியார் பாலை விட ஆவின் பாலுக்கு எப்போதும் பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோட்லா, திருமாலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் ஆகிய 4 நிறுவனங்களின் பால் விலை குறைக்கப்பட்டன.
ஆனால் ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை குறைக்கவில்லை. தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 விலையை திடீரென குறைத்துள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.42–ல் இருந்து ரூ.40 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.46–ல் இருந்து ரூ.44 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.50–ல் இருந்து ரூ.48 ஆகவும் குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதே போல தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.2 குறைந்தது.

தனியார் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தாலும் ஆவின் பால் விலையை விட அதிகமாகவே உள்ளது. லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை கூடுதலாக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:–

ஆரோக்கியா பால் நிறுவனம் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 விலையை குறைத்துள்ளது. இது வெறும் கண் துடைப்பு நாடகமாகும். பல்வேறு காரணங்களை காட்டி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் லிட்டருக்கு ரூ.12 வரை விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின.

தற்போது பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விற்பனை விலையை லிட்டருக்கு வெறும் ரூ.2 மட்டுமே குறைத்துள்ளன. இது போதாது. லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை விலையை குறைக்க வேண்டும்.

அதே போல ஆவின் நிறுவனமும் பால் விலையை மேலும் குறைத்து பால் கொள்முதல் வீழ்ச்சியை தடுக்க வேண்டும். மேலும் பால் முகவர்களுக்கு சதவிகித அடிப்படையில் நிர்ணயம் செய்து தர வேண்டும்.

ஆவின் நிறுவனத்தில் மொத்த வினியோகஸ்தர்கள் எனப்படும் இடைத் தரகர்களை முற்றிலும் நீக்கி விட்டு நேரிடையாக வர்த்தக தொடர்புகளை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து