முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: விராட் கோலியின் புது யுக்தி

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,ஆக.-4, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பவுலர்களை அணியில் சேர்த்து விளையாடும் உத்தியைக் கடைபிடிக்கப் போவதாக இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

5 பவுலர்கள் அணியில் விளையாடும் சாத்தியம் உள்ளது. 20 எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் இதன் நோக்கம். இவ்வாறுதான் நாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். சிறந்த பவுலர்கள் விளையாட வேண்டும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

மேலும் நம்மிடையே அஸ்வின், புவனேஷ் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர், இவர்கள் பின்வரிசையில் பயனுள்ள பேட்ஸ்மென்களாகவும் பங்களிப்பு செய்ய முடியும். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் சராசரி 40. எனவே அவர் நமது அணியின் ஆல்ரவுண்டர். வீரர்களுக்கு இலக்கை நிர்ணயித்து சில இடங்களில் அவர்களின் ஆட்டத்தில் மேம்பாடு பெற செய்து, அணிக்குத் தேவைப்படும் கூடுதல் திறமைகளை கொண்டு வர முடியும். 

சிறந்த பந்துவீச்சுதான் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும், பேட்ஸ்மென்களும் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொள்வது அவசியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்