முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிசின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், பெடரரை தோற்கடித்து மற்றொரு முன்னணி ஆட்டக்காரரான நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான செர்பிய நாட்டின் ஜோகோவிச்சும், முன்னணி வீரரான ரோஜர் பெடரரும் சந்தித்தனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-5, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார்.ஜோகோவிச் இவ்வாண்டில் வென்ற 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே இந்த ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் வெல்லும் 10வது கிராண் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

28 வயது ஜோகோவிச் கடந்த 2011ம் ஆண்டிலும் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.ஏற்கனவே சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியிலும், இதே ஜோடி மோதியது. அதிலும் பெடரர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்