முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின். ரவி சாஸ்திரி புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி அஸ்வின் குறித்த கேள்வி ஒன்றுக்கு தற்போது உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் என்று புகழாரம் சூடியுள்ளார். பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் பற்றி குறிப்பிடுகையில்,

இலங்கையில் தொடரின் போது அஸ்வின் அசத்தினார், காரணம் அவர் மிகவும் ரிலாக்ஸாகவும் பொறுமையாகவும் செயல்பட்டதே. அவரிடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டார். இதனை அவர் உணர்ந்து விட்டார். அமைதியுடன், சாதுரியமும், புத்திசாலித்தனமும் அவரிடம் சேர்ந்துள்ளது.

உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் தற்போது அஸ்வினே. நேதன் லயன் நல்ல ஆஃப் ஸ்பின்னர்தான், ஆனால் அஸ்வினிடம் உள்ள தினுசு தினுசான பந்துவீச்சு அவரிடம் இல்லை. குமார் சங்ககாராவுக்கு அவர் வீசிய விதம் இதனை நமக்கு உணர்த்துகிறது. சங்கா போன்ற ஒரு அற்புதமான பேட்ஸ்மெனை 4 முறை நிறுத்தி எடுப்பதெல்லாம் அரிதான ஒரு காரியம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்