முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.5சதவீதம் குறைத்தது

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று 0.5 சதவீத வட்டி விகிதத்தை  குறைத்தார். இந்த நடவடிக் கையால் வீட்டுக்கடன் , நுகர்வோர் மற்றும் தொழில் துறை கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தவுடன் நாட்டின் பிரதான வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை 0.4சதவீதம் குறைத்துள்ளது.

இதேப்போன்று நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்போம் என குறிப்பிட்டுள்ளன.இந்தநிலையில் பொதுத்துறை வங்கியான ஆந்திரா வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்தது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் கடன் வாங்குவோர் நல்ல பலன்களை பெறுவார்கள். இந்த வட்டி விகித குறைப்பால் டெபாசிட் மற்றும் சேமிப்பு வட்டி விகிதம் குறையும். சிறு சேமிப்பு, பி.பி.எப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் டெபாசிட்டுகள் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தையும் மத்திய அரசு ஆய்வு செய்கிறது.

இந்த 2015ம்ஆண்டில் ரிசர்வ் வங்கி இதர வங்கிளுக்கு அளிக்கும் கடன் களுக்கான வட்டி விகிதத்தை 4வதுமுறையாக குறைத்துள்ளார். கடந்த 3ஆண்டுகளில் முதன் முறையாக மிக அதிக அளவில் ரிசர்வ் வங்கி வட்டி தற்போது வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது.ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கு அளித்த கடன் வட்டி விகிதத்தை 7.25சதவீதத்தில் இருந்து 6.75சதவீதமாக நடப்பு நிதியாண்டில் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4.5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.2017ம்ஆண்டு கால கட்டத்தில் பணவீக்க விகிதத்தை 5சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கு மேற் கொள்ளப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் நடவடிக் கையை மத்திய அரசும் வங்கித்துறையும் வரவேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்