முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு 4ம்தேதி முதல் அசல்மதிப்பெண் சான்றிதழ்கள்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 4 ம்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத்தேர்வுத்துறை அறிவித்திருக்கிறது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு
கடந்த செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 28ம்தேதி். முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் ஜனவரி 26ம்தேதி வரை மட்டுமே செல்லத்தக்கதாகும். மேற்படி தேர்விற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும் வருகிற4ம்தேதி அன்று காலை 10.00 மணி முதல் 11.ம்தேதி வரை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் (ஞாயிறு நீங்கலாக)அலுவலக நேரத்தில், விநியோகம் செய்யப்படவுள்ளது என்றும் 11.ம்தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பி்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்