முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - அப்சல் குருவின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட ரெயில் சேவை காஷ்மீரில் நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி முகமது அப்சல் குருவின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நேற்று முன்தினம் பந்திற்கு அழைப்பு விடுத்தன.  இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரெயில் சேவை ஒரு நாள் முழுவதும் தற்காலிகம் ஆக ரத்து செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று ரெயில் சேவை வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. அதன்படி, வட காஷ்மீரில் ஸ்ரீநகர்-பட்காம் மற்றும் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ரெயில் சேவை நேற்று நாள் முழுவதும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. இதேபோன்று, வட காஷ்மீரின் பட்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காஜிகண்ட் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்முவின் பேணிஹல் பகுதியை நோக்கி செல்லும் ரெயில்களின் சேவையும் நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது என ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

கடந்த காலங்களில், பந்தின் பொழுது நடத்தப்பட்ட போராட்டங்களினால் ரெயில்களும் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தின் சொத்துகளும் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.  இதனால் ரெயில் சேவையை நேற்று முன்தினம் ஒரு நாள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்திய பாராளுமன்றத்தின் மீது கடந்த 2001ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் முக்கிய குற்றவாளியாக அப்சல் குரு அறியப்பட்டார்.  அவருக்கு பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர்.

அவர், புதுடெல்லியில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் ஆயுதங்களை வழங்கியுள்ளார். இந்த தகவலை அவருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தொலைபேசிவழி தகவல் உறுதி செய்தது. அதனை அவரும் ஒத்து கொண்டுள்ளார்.  அதன்பின் 2001-ம் ஆண்டு அப்சல் குரு வேறு 3 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் 2002ம் ஆண்டு சிறப்பு தீவிரவாத தடுப்பு சட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளி என முதன்முதலில் அறிவித்து மரண தண்டனையும் அளித்து உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் 2003ம் ஆண்டில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்