முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாமக குளத்தில் இதுவரை 60 லட்சம் பக்தர்கள் நீராடல்

புதன்கிழமை, 9 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

பட்டீஸ்வரம் - தென்னகத்தின் கும்பமேளா என அழைக்கப்படும் கும்பகோணம் மகாமக விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு மகாமக விழா கடந்த மாதம் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் புனித நீராடலாம் என மடாதிபதிகள் மற்றும் அறநிலையத்துறையினர் அறிவித்து இருந்தனர். இதனால் கொடியேற்றம் முதல் பக்தர்கள் புனித நீராட தொடங்கினார்கள். முதல் நாளில் 1.5 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் நீராடிவந்தனர். கடந்த மாதம் 22-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கீர்த்த வாரி நடைபெற்றது. அன்று 15 லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் நீராடினார்கள்.

அதற்கு முந்திய நாளான 20 மற்றும் 21-ம் தேதி விடுமுறை நாள் என்பதால் தினமும் தலா 5 லட்சம் பக்தர்கள்  புனித நீராடினார்கள். மாசி மாதம் முழுவதும் மகாமக குளத்தில நீராடலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தீர்த்தவாரி முடிந்த பின்னரும் பகதர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கும்கோணம் வாகன நெரிசலில் சிக்கியது. குறிப்பாக விடுமுறை  நாட்களில் கூட்டம் அதிகம்  காணப்படுகிறது. நேற்றுமுன்தினம் அம்மாவாசை என்பதால் மகாமக குளத்தில் ட்சக்கணக்கானோர் நீராடினார்கள். இதுவரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ளனற். மாசி மாதம் வருகிற 13-ம் தேதி முடிவடைகிறது. அதுவரை பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

மகாமக குளத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதால் தண்ணீர் மிகவும் கலங்கலாக உள்ளது. இதற்கு காரணம் குளத்திற்கு வரும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதுதான். மகாமக நேரத்தில் தண்ணீர் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட்டு குளோரின் தெளிக்கப்பட்டது. எனவே மாசி மாதம் முடியும் வரை தண்ணீர் அளவை அதிகரித்து குளோரின் தெளிக்க வேணஅடும். கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்